×

அதிமுகவின் நிலைப்பாடு ஏமாற்றுகின்ற நிலைப்பாடு: டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் தாக்கு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று அளித்த பேட்டி: குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வருவது குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்டார்கள். ஆனால் மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். மாநிலங்களை ஏமாற்றி இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். இஸ்லாமியர் மீது உள்ள வெறுப்புணர்வில் மட்டுமே இந்த குடி யுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தார்கள்.

குடியுரிமை அதிகாரம் ஒன்றிய அரசிடம் இருக்கிறது என எங்களுக்கும் நன்றாக தெரியும். மாநிலங்களை ஏமாற்றும் வேலையை ஒன்றிய அரசு செய்கிறது. இலங்கை தமிழர்களையும், இஸ்லாமியர்களும் சிஏஏ சட்டத்தில் சேர்க்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது. நாட்டின் நலனைப் பற்றி பாஜ சிந்திக்காது. எதையாவது சொல்லி ஓட்டு வாங்கி விடலாம் என்று பார்க்கிறார்களே தவிர மக்கள் நலன் மீது அக்கறை இல்லை. திருத்தச் சட்டத்திற்கு 3 திருத்தங்களை திருச்சி சிவா அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஒரு திருத்தம் இலங்கை மக்களை சேர்ப்பது, இன்னொரு திருத்தம் இஸ்லாமியர்களை சேர்ப்பது, மூன்றாவது பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சேர்க்க வேண்டும். திருச்சி சிவாவின் திருத்தத்திற்கு ஆதரவாக 99 வாக்குகள், எதிர்ப்பாக 124 வாக்குகள் கிடைத்தது. இந்த 124 வாக்குகளில் 13 வாக்குகள் அதிமுகவின் வாக்குகள். இந்த 13 வாக்குகளும் சிவாவின் திருத்தத்தை ஏற்றிருந்தால் 112 சிவாவின் திருத்தத்திற்கு ஆதரவாகவும், 111 எதிராகவும் இருந்திருக்கும்.

இந்த திருத்தம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். திருத்தச் சட்டத்தின் போது அதிமுக மாற்றி தங்களது வாக்கை அளித்தது, குறை சொல்வதற்கு எந்த நியாயமும் இல்லை. எந்த அருகதையும் இல்லை. பாஜவுடன் ஒன்று சேர்ந்து தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் வஞ்சித்தவர்கள் அதிமுக. சட்டத்தை நிறைவேற்றிய பிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருப்பது எப்படி சரியாகும். அந்தச் சட்டத்தை தடுத்திருக்க வேண்டும், திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வைத்திருக்க வேண்டும். அதிமுகவின் நிலைப்பாடு என்பது ஏமாற்றுகின்ற நிலைப்பாடு. இரண்டு ஃபிராடு கம்பெனிகள் சேர்ந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவின் நிலைப்பாடு ஏமாற்றுகின்ற நிலைப்பாடு: டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DKS Elangovan ,DMK Press Relations Committee ,Chennai Anna Vidyalaya ,TKS Elangovan ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...